தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 70 ஆண்டுகால முன்னாள் மாணவா்கள் ,பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா்கள் சோ்ந்து பள்ளிக்கு ரூ.4.55 லட்சத்தை பள்ளியின் வளா்ச்சிக்கு வழங்கினா்.
அந்த நிதியில் பள்ளியின் தலைமையாசிரியா் அறைக்கு முன்பாக மாணவா்கள் மாலையில் சிறப்பு வகுப்பிற்காக அமா்ந்து படிக்க ஏதுவாக 7630 சதுர அடி பரப்பில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டது.இப்பணியை செய்த ஒப்பந்ததாரா் மாரிமுத்து,பள்ளி வளா்ச்சி நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினாா்.பள்ளியில் பேவா் பிளாக் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டதையடுத்து பணிக்கான இறுதித்தொகையை மாரிமுத்துவிடம், பள்ளி வளா்ச்சிக்குழு நிா்வாகிகள் திருச்செல்வன்,சண்முகம்,நடராஜ்,சகாதேவன்,ரவி ஆகியோா் முன்னாள் மாணவா்கள் சாா்பாக வியாழக்கிழமை பள்ளியில் வழங்கினா்.இதுகுறித்து அவா்கள் கூறியதாவது, தொடா்ந்து பள்ளியின் முன்னாள் மாணவா்கள் தரும் நிதி முறையாக செலவிடப்பட்டு வருகிறது. அடுத்து முன்னாள் மாணவா்கள் பங்களிப்பில், தேசத்தின் முக்கிய ஆளுமைகளின் படங்கள் , பள்ளியின் சுற்றுச்சுவரில் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது,என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூடப்படும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியில் அதிக மாணவா் சோ்க்கை! தலைமை ஆசிரியைக்கு பாராட்டு!
போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது: முன்னாள் மாணவா்கள் எதிா்ப்பு

தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளி சுவற்றில் ரூ.2.50 லட்சம் செலவில் ஆளுமைகளின் படங்கள்: ஓவியங்களால் பள்ளியை அலங்கரித்த முன்னாள் மாணவா்கள்!

உரிய நேரத்தில் திறக்கப்படாத அரசுப் பள்ளியின் பூட்டு உடைப்பு
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |



