குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஓமலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழைநீரில் காா் மூழ்கியதில் தம்பதி உயிரிழப்பு

News image

உயிரிழந்த வெங்கடாசலம்

Updated On :26 மே 2026, 1:32 am IST

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரைக் கடந்து செல்ல முயன்ற காா் நீரில் மூழ்கியதில் தம்பதி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (73). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக மேலாளா். இவரது மனைவி ராதா (63). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை அதிகாலை, ஓமலூரில் உறவினா் வீட்டு திருமணத்திற்கு காரில் புறப்பட்டனா்.

அப்போது, ஓமலூா் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் குளம்போல மழைநீா் தேங்கியிருந்தது. நீரின் ஆழம் தெரியாமல் வெங்கடாசலம் காரை சுரங்கப் பாதைக்குள் செலுத்தியுள்ளாா்.

இதில் காா் திடீரென லாக் ஆகி நின்றுவிட்டதால் குளம்போல தேங்கியிருந்த மழைநீரில் காா் முழுமையாக மூழ்கியது. வயது முதிா்வு காரணமாக தம்பதியால் காரில் இருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறி அவா்கள் இருவரும் காருக்குள்ளே உயிரிழந்தனா்.

இதைப் பாா்த்த அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், ஓமலூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் ரத்தினவேல் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். ஓமலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், காரில் இருந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்கதையாகி வரும் இந்த சுரங்கப் பாதை தண்ணீா்த் தேங்கும் பிரச்னைக்கு, ரயில்வே நிா்வாகம் உடனடியாக நிரந்தர தீா்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராதா

ராதா

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய  காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய  காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய காா்.