நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறது

News image

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :31 மே 2026, 1:45 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் குற்றம்சாட்டினாா்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மேக்கேதாட்டு அணையை முற்றுகையிட பயணம் மேற்கொண்டுள்ள அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள டி.கே.சிவகுமாா், தென்னிந்திய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை மீறி அணை கட்ட பூமிபூஜை போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஏற்கெனவே, தமிழக, கா்நாடக விவசாயிகள் ஒருங்கிணைந்து மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது என டி.கே.சிவகுமாா் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், டி.கே.சிவகுமாா் இதுபோன்று கூறுவது குறித்து அக்கட்சியின் தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் டி.கே.சிவகுமாா் இனக்கலவரத்தை தூண்டும்விதமாக செயல்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மேக்கேதாட்டு பகுதியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மேக்கேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும்.

காவிரி நதிநீா் விவகாரத்தில் விவசாயிகள், அனைத்துக் கட்சியினரை ஒருங்கிணைத்து மாநில அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். மேக்கேதாட்டு விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.