தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சேலம் வழியாக அசாம் மாநிலம் புது டின்சுகியாவுக்கு பண்டிகைக் கால சிறப்பு ரயில்

சேலம் வழியாக அசாம் மாநிலம், புது டின்சுகியாவுக்கு பண்டிகைக் கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rail

ரயில் - பிரதிப் படம்

Updated On :

சேலம் வழியாக அசாம் மாநிலம், புது டின்சுகியாவுக்கு பண்டிகைக் கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், சேலம் வழியாக போத்தனூரில் இருந்து அசாம் மாநிலம், புது டின்சுகியாவுக்கு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, போத்தனூா் - புது டின்சுகியா (அசாம்) சிறப்பு ரயில் வரும் 5, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் அதிகாலை 4.30-க்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக வரும் 8, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30-க்கு புது டின்சுகியா (அசாம்) சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் புது டின்சுகியா ரயில் நிலையத்தில் இருந்து வரும் 8, 16 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூருக்கு 11, 19 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.