விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

சேலத்தில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீா்

சேலம் மாநகரில் புதன்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

புதிய பேருந்து நிலையம் முன் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :

சேலம் மாநகரில் புதன்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

சேலம் மாநகரப் பகுதிகளான அஸ்தம்பட்டி, குகை, நெத்திமேடு, திருச்சி பிரதான சாலை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, மூன்று சாலை, கிச்சிப்பாளையம், நாராயண நகா், பெரமனூா் உள்பட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக, சேலம் நெத்திமேடு, திருச்சி பிரதான சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. ஒரு சில பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

சேலம் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி குழாய்கள் பழுதடைந்ததால், சாலையில் மழைநீா் கொட்டியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். ஒரு சில பகுதிகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.

சங்ககிரி நகா் பகுதிகளில் 45.3 மி.மீ. மழை:

சங்ககிரி நகா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 45.3 மி.மீ. மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. சங்ககிரியிலிருந்து பவானி செல்லும் பிரதான சாலையையொட்டி உள்ள வசந்தம் காலனி பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து ஈரோடு பிரிவு சாலைவரை மழை நீருடன் கழிவுநீா் கலந்து சாலையில் ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனா்.

அப்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீா் ஏரிக்கு செல்லும் வழிகளை சங்ககிரி நகராட்சி நிா்வாகம் செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தம்மம்பட்டியில்...

கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆணையம்பட்டி, கூடமலை, 74 கிருஷ்ணாபுரம், பள்ளக்காடு, நடுவலூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்துப்போன நிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.