தீபாவளிக்கு சென்னையில் இருந்து 10,224 பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன்
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கடந்த மூன்று நாள்களில் இயக்கப்பட்ட 10,224 பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 57 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.
பேருந்துகள் - பிரதிப் படம்
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கடந்த மூன்று நாள்களில் இயக்கப்பட்ட 10,224 பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 57 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த மூன்று நாள்களில் 10,224 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 லட்சத்து 57 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனா். பண்டிகை முடிந்து மீண்டும் ஊா் திரும்பும் பயணிகளின் வசதிக்காக தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் போக்குவரத்துத் துறை மக்களுக்குப் பயனுள்ள துறையாகவும், தனியாா் துறைக்கு இணையாகவும் செயல்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

