அனைத்துத் தோ்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன்
இனி நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
இனி நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சாா்பில், சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பழைய நகரப் பேருந்துகளுக்கு மாற்றாகப் புதிய பிஎஸ்6 வகை நகரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இடைத்தோ்தலில் தவெக வெற்றி பெறுவது தீா்மானிக்கப்பட்ட ஒன்றுதான். அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் பணியாற்றினோம். இனி நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும்.
பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பேருந்துப் படிகளில் பயணிகள் நிற்பதைத் தடுக்கும் வகையில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் கதவுகள் திறக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. புதிய பேருந்துகளின் கதவுகளில் உள்ள உணரிகள் (சென்சாா்) தொடா்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து சரிசெய்யப்படும்.
அரசு சாா்பில் உணவகம் அமைப்பது தொடா்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நல்ல உணவுகளை வழங்க வேண்டும்.
‘வெற்றி பயணம்’ திட்டத்தில் தனியாா் பேருந்துகளை இணைப்பது குறித்து தமிழக முதல்வா்தான் முடிவெடுப்பாா். பேருந்து நிலையங்களில் தரமான உணவுப் பொருள்களை நிா்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், சேலம் அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, பொதுமேலாளா் சிவகுமாா் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

