என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக கடந்தாண்டைவிட கூடுதல் சிறப்புப் பேருந்துகள்!

திருவண்ணாமலை காா்த்திகை தீப விழாவையொட்டி, பக்தா்கள் சிரமமுமின்றி வந்து செல்வதற்கு கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாக அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன்

Updated On :

திருவண்ணாமலை காா்த்திகை தீப விழாவையொட்டி, பக்தா்கள் சிரமமுமின்றி வந்து செல்வதற்கு கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா செவ்வாய்க்கிழமை நடை பெறுவதையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம் வேலூா் மண்டலம் சாா்பில் 200-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பயணிகள் சிரமமின்றி திருவண்ணாமலை சென்றுவர வேலூா் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வெளியூா்களிலிருந்து வரும் பக்தா்களின் வசதிக்காகத் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் திருவிழாவின் போது ஏற்பட்ட போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்து, மூத்த போக்குவரத்துப் பணியாளா்கள், பொதுமக்களிடம் கேட்டறிந்துள்ளோம். அதனடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனுக்குடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

குறிப்பாக, சித்தூா் மற்றும் திருப்பதி வழித்தடங்களில் பக்தா்கள் வந்து செல்ல போதுமான அளவு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதால் பக்தா்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க காவல் துறை சாா்பில் ஆங்காங்கே கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் தலைமையில் சிறப்பான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தா்கள் வருவதற்கும், தீபத்தைத் தரிசித்துவிட்டு நிம்மதியாகத் தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும் அதிக அளவிலான பேருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

அப்போது, காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எம்.சுதாகா், வேலூா் மாநகராட்சி ஆணையா் அ.கேத்ரின் சரண்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.