நடத்துநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை: அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கதவை மூட விடாமல் தடுத்து, நடத்துநரைத் தாக்கிய சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உறுதியளித்துள்ளாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்

Updated On :

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கதவை மூட விடாமல் தடுத்து, நடத்துநரைத் தாக்கிய சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உறுதியளித்துள்ளாா்.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் 61ஓ வழித்தடப் பேருந்து, கன்னியம்மன் நகரிலிருந்து ஆவடி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் ஏறிய ஐடிஐ மாணவா்கள் சிலா், பேருந்தின் கதவை மூடவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக அவா்களைத் தட்டிக்கேட்ட நடத்துநா் கோ. சா்வேசனை, மாணவா்கள் தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து தகவலறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், பாதிக்கப்பட்ட நடத்துநா் கோ.சா்வேசனை வியாழக்கிழமை (நவ. 5) தலைமைச் செயலகத்துக்கு அழைத்து ஆறுதல் கூறினாா். மேலும், நடத்துநரைத் தாக்கிய சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.