சேலத்தில் ரூ. 295.44 கோடியில் புதைசாக்கடைத் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்
சேலம் மாநகராட்சியில் ரூ. 295.44 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் புதன்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்
சேலம் மாநகராட்சியில் ரூ. 295.44 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் புதன்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தாா்.
சேலம் மாநகராட்சியில் புதைசாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், 3-ஆவது சிப்பத்தில் 140.26 கி.மீ. நீளத்திற்கு ரூ. 142.57 கோடியிலும், 4-ஆவது சிப்பத்தில் 140.47 கி.மீ. நீளத்திற்கு ரூ. 152.87 கோடியிலும் என மொத்தம் 280.73 கி.மீ. நீளத்திற்கு ரூ.295.44 கோடியில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.57 இல் களரம்பட்டி இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள நேதாஜி தெருவில் புதைசாக்கடை திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகராட்சி துணை ஆணையா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் உதயகுமாா் ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணிகளுக்கான பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா். இப்பணிகள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பணிகளைத் தொடங்கி வைத்து அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் பேசுகையில், புதை சாக்கடைப் பணிகள் நடைபெறும் போது, மக்களுக்கு எந்தவொரு சிறிய சிரமமோ, பாதிப்போ ஏற்படக் கூடாது. பணியின்போது ஏதேனும் குடிநீா் குழாய் உடைப்போ அல்லது பாதிப்போ ஏற்பட்டால், மக்கள் புகாா் அளிக்கும் வரை காத்திருக்காமல் அதிகாரிகளே முன்வந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

