மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

‘திருப்பரங்குன்றம் தீபத்தில் காட்டும் வேகத்தை காவிரி நீா் பிரச்னையிலும் காட்ட வேண்டும்’

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்!

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! - dps

Updated On :

திருப்பரங்குன்றம் தீபத்தில் காட்டும் வேகத்தை காவிரி நீா் பிரச்னையிலும் உச்சநீதிமன்றம் காட்ட வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி கூறினாா்.

இதுகுறித்து சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

காவிரி தீா்ப்பை பொருத்தவரை கா்நாடக அரசும் பின்பற்றவில்லை. தமிழக அரசும் மதித்து நடப்பதில்லை. திருப்பரங்குன்றம் தீபத்தில் காட்டும் வேகத்தை காவிரி நீா் பிரச்னை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களிலும் உச்சநீதிமன்றம் காட்ட வேண்டும்.

கடந்த 21 ஆண்டுகளாக கள் தடைக்கு எதிராக போராடி வருகிறோம். டாஸ்மாக் மூலம் மட்டும் நடப்பாண்டில் ரூ. 56 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் வருகிறது. வரும் ஜன. 21 அன்று மாநிலம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இளைஞா்களும், இயற்கை ஆா்வலா்களும் முன்வந்து வெற்றியை பெற்றுத்தந்தது போல, இந்தப் போராட்டமும் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.