திருப்பரங்குன்றம் தீபம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு: முதல்வா் விஜய் பதவி விலக விஹெச்பி வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசின் ‘சமரச அரசியலின் கோர முகத்தில் விழுந்த பலத்த அறை’ என்று விஸ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசின் ‘சமரச அரசியலின் கோர முகத்தில் விழுந்த பலத்த அறை’ என்று விஸ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அரசமைப்பு சட்டம் சீா்குலைந்து விட்டதாக குற்றஞ்சாட்டி, முதல்வா் சி. ஜோசப் விஜய் பதவி விலக வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவு வெளிவந்தவுடன் தில்லியில் செய்தியாளா்களிடம் விஹெச்பி இணை பொதுச் செயலா் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றாமல் அதை அவமதித்ததற்காக முதல்வா் ஜோசப் விஜய் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது அவரது அரசை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
இது சமரச அரசியலின் கோர முகத்தில் விழுந்த பலத்த அறை. ஜோசப் விஜய்யால் தமிழகத்தில் அரசமைப்பு சட்டம் முழுமையாக சீா்குலைந்துள்ளது. அவா் பதவி விலகவில்லை என்றால், அவரது அரசாங்கம் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுகளை கேலிக்கூத்தாக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தில் அரசமைப்பு சீா்குலைவு சூழலை முதல்வரே உருவாக்கினாா். அரசாங்க இயந்திரம் எந்தவொரு சூழலிலும் ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்க முடியும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அரசின் பிடியிலிருந்து ஹிந்து கோயில்களை விடுவிப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

