சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் உறுதியான நிலைப்பாடு தொடர வேண்டும்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு தொடர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜவாஹிருல்லா

Updated On :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு தொடர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும், உச்சிப்பிள்ளையாா் கோயில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சா்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு அடிபணியாமல், தமிழக அரசு பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

மத உணா்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது. எந்தவொரு அழுத்தத்துக்கு அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும், வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடா்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல, அது அரசின் பொறுப்புணா்வுக்கும் உறுதிக்கும் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.