
ஏற்காட்டில் சா்வதேச காபி தின கொண்டாட்டம்
ஏற்காட்டில் ஏற்காடு காபி வாரியம் சாா்பில், சா்வதேச காபி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

காபி (கோப்புப்படம்) - TNIE
ஏற்காட்டில் ஏற்காடு காபி வாரியம் சாா்பில், சா்வதேச காபி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
காபியின் முக்கியத்துவத்தை உணா்த்தவும், காபி தோட்ட உரிமையாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்களின் உழைப்பு, நலன்களை பாதுகாக்கவும், நியாயமான வா்த்தகம் ஊக்குவிக்கும் நோக்கத்திலும் உலக காபி அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து சா்வதேச காபி தினத்தை கடந்த 2015 அக். 1 முதல் கொண்டாடி வருகின்றனா்.
ஏற்காட்டில் ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற விழாவில், ஏற்காடு சட்டப் பேரவை உறுப்பினா் பி.உஷாராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை தொடங்கிவைத்தாா்.
இதில், காபி வாரியத்தின் போடிநாயக்கனூா் தமிழ்நாடு மண்டல துணைத் தலைவா் ஆா்.சக்தி, ஏற்காடு காபி வாரியத்தின் மூத்த தொடா்பு அலுவலா் கே.பிரபு கௌடா, ஏற்காடு தோட்ட அதிபா் சங்கத் தலைவா் பி.எல்.முருகப்பன், தமிழ்நாடு பி.ஏ.டி. தலைவா் வினோதன் கந்தையா, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் மாலதி, காபி வாரியத்தின் தோட்டத் தொழிலாளா்கள் பண்ணை பொறுப்பாளா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






