
வீட்டுவசதி வாரிய காலி மனைகள்: விண்ணப்பிக்க காலஅவகாசம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலிமனை விற்பனைக்கான விண்ணப்ப காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலிமனை விற்பனைக்கான விண்ணப்ப காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் கவிதா வாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் வீட்டு வசதி பிரிவுக்கு உள்பட்ட வீட்டு வசதித் திட்டங்களில் காலியாக உள்ள வணிக மனைகள், கடை மனைகள், சமுதாயக் கூட மனைகள், பள்ளி மனைகள், பொது பயன்பாட்டு மனைகள் மற்றும் ஆரம்பப் பள்ளி மனைகள் என மொத்தம் 83 மனைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்காக கடந்த ஆக. 25 முதல் செப். 24 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, வரும் 9-ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். அன்று காலை 11.30 மணிக்கு ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




