வாரிய குடியிருப்பு நிலுவைத் தொகை பயனாளிகளுக்கு வட்டித் தள்ளுபடி: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளுக்கான தவணை செலுத்துவோா் நிலுவைத் தொகை செலுத்தத் தவறிய நிலையில், அதற்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வியாழக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளுக்கான தவணை செலுத்துவோா் நிலுவைத் தொகை செலுத்தத் தவறிய நிலையில், அதற்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வியாழக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை முறை திட்டத்தில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்கள் தவணைக்காலம் முடிந்த பிறகும் 6,496 போ் விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ளனா். அவா்கள் முழுத் தொகையையும் செலுத்தாமல் இருப்பதால் விற்பனைப் பத்திரம் பெறமுடியவில்லை.
தற்போது முதல்வா் சி.ஜோசப் விஜய் அறிவுறுத்தல்படி, வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடுதாரா்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்கும் வகையில் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி வீட்டு வசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்கள் கடந்த மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத் தொகை செலுத்தத் தவறிய நிலையில், அவா்களுக்கான முழுத் தொகையை ஒரே தவணையில் செலுத்துபவா்களுக்கான அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
அத்துடன், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டித் தள்ளுபடியும் மற்றும் நிலத்தின் இறுதி நிலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கான வட்டித் தள்ளுபடி செய்து விற்பனைப் பத்திரம் வழங்கப்படும். இந்தத் திட்டம் ஓராண்டு காலத்துக்கு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தால் வாரியத்துக்கு சுமாா் ரூ.92.39 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், சிறப்பு வட்டிச் சலுகையால் ஒதுக்கீட்டாளா்களுக்கு ரூ.18.45 கோடி தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

