இனி தத்கல், ஆர்ஏசி, கட்டண மாற்றம் இல்லை! புதிய வந்தே பாரத் சேவை பற்றிய முழு விவரம்கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை வாங்கியோருக்கு வட்டி தள்ளுபடி! முதல்வர் விஜய்

வீட்டுவசதி வாரியத்தில் திட்ட ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிப்பு.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய  ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில் வட்டி தள்ளுபடி செய்திட முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைமுறைத் திட்டத்தின் கீழ் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று தவணைக் காலம் முடிவுற்ற பின்பும் விற்பனைப் பத்திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர்.

இவர்கள் முழுத்தொகையையும் செலுத்தாமல் விற்பனைப் பத்திரம் பெறமுடியாமல் உள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் அறிவுரையின்படி, ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்திற்கான வட்டிச் சுமையைக் கருத்திற்கொண்டு விற்பனைப் பத்திரம் விரைவாக வழங்குவதற்கு ஏதுவாக வட்டி தள்ளுபடி செய்வதாக 2026-2027ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய  ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், அத்தொகையினை ஒரே தவணையாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி தள்ளுபடியும்,  வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி தள்ளுபடியும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்குண்டான வட்டி தள்ளுபடியும் செய்து விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் ஓராண்டு காலத்திற்கு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்மூலம், சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், வாரியத்திற்கு சுமார் ரூ. 92.39 கோடி வருவாய் ஏற்படுவதுடன், இந்தச் சிறப்பு வட்டி சலுகையின் மூலம் ஒதுக்கீட்டாளர்களுக்கு ரூ. 18.45 கோடி தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister C. Joseph Vijay has ordered a waiver of interest for allottees under the Tamil Nadu Housing Board’s installment-based purchase schemes—covering plots, houses, and apartments—where the installment period concluded on or before March 31, 2026, and who have failed to pay their outstanding dues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.