ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!

தமிழக வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் வாங்குவோருக்கு..! பதிவு செய்ய அழைப்பு!

தமிழக வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் வாங்குவோர் கவனத்துக்கு... தமிழக அரசு தகவல்.

house

அடுக்குமாடி குடியிருப்புகள் - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு, தமிழக அரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று 2026-2027 ஆம் ஆண்டு கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டத் தொடரின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மாவட்டம் - அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் - குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் - வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்டப்படும்.

மேலும், இத்திட்டங்களை திட்டமிடும் முன், பொதுமக்களின் கேட்பினை (Demand Assessment) அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) ஒரு பிரத்யேக இயங்குதளத்தை (Portal) உருவாக்கியுள்ளது.

மேற்கண்ட இயங்குதளத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் விருப்ப இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய  பிற தேவைகளை பதிவு செய்யலாம். பெறப்படும் இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே தவிர வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான எந்தவொரு முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது.

ஆனால், மேற்படி மதிப்பீட்டுப் பதிவை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளவர்களுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்கான  தேதி விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்த எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தை (https://tnhb.tn.gov.in) அணுகி, தங்களின் கேட்பினை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has released new information for those purchasing Tamil Nadu Housing Board residential units.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER