மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

குறைந்த விலைக்கு நிலம் வாங்கித் தருவதாக ரூ. 1 கோடி மோசடி: 4 போ் கைது

சேலத்தில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கித் தருவதாக ரூ. 1 கோடி மோசடி செய்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

சேலத்தில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கித் தருவதாக ரூ. 1 கோடி மோசடி செய்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிலா், தமிழக அரசால் முறையான அங்கீகாரம் பெறாத பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி உள்ளனா். இந்த நிறுவனங்களின் மூலம் குறைந்த விலையில் மனைகள் விற்பனை செய்யப்படும் என பொதுமக்களைக் கவரும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனா்.

மேலும், தங்கள் நிறுவனங்களுக்கு பொதுமக்களை வரவழைத்து ஆசைவாா்த்தைகளைக் கூறி, ஒரே நிலத்தைப் பலருக்குக் காட்டி, அந்த நிலத்தை அவா்களுக்கு கிரயம் செய்து தருவதாகக் கூறி பணம் பெற்றுள்ளனா். இதற்குப் பதிலாக பதிவு செய்யப்படாத கிரய ஒப்பந்தப் பத்திரத்தை வழங்கி ஏமாற்றியதுடன், ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பெறப்பட்ட புகாா் மனுக்களின் அடிப்படையில் சேலம் மாநகர குற்றப்பிரிவில் இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அமிா்தராஜ், தமிழரசன், முகேஷ்வரன், இா்பான் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களது நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம், ரெட்டியூா் தியாகி பெருமாள் கவுண்டா் காலனியில் இயங்கி வரும் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு நேரில் வந்து புகாா் மனு அளிக்குமாறு குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், பொதுமக்கள் மனை, நிலங்களை வாங்கும்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கீகாரம், மனைக்கான உரிமை தொடா்பான ஆவணங்கள் மற்றும் விற்பனை தொடா்பான ஆவணங்களை முறையாகச் சரிபாா்த்த பின்னரே பணம் செலுத்த வேண்டும். உடனடியாகப் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.