கல்லூரி பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
மேட்டூா் அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே உள்ள செக்கானூரை சோ்ந்த தொழிலாளி முனியப்பன் (80), திங்கள்கிழமை மாலை செக்கானூா் பகுதியில் சாலையோரம் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக சென்ற தனியாா் கல்லூரி பேருந்து அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

