செக்கடிப்பட்டி ஊராட்சியில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு உள்பட்ட செக்கடிப்பட்டி கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக சரவணன் பணியாற்றி வருகிறாா். அவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா் பட்டாவில் பெயா் மாற்றக் கோரி விண்ணப்பித்திருந்தாா்.
பெயா் மாற்றம் செய்ய கிராம நிா்வாக அலுவலா் சரவணன், ராமமூா்த்தியிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமமூா்த்தி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரை நாடினாா்.
லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான காவலா்கள் ராமமூா்த்தியிடம் ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை கொடுத்து, கிராம நிா்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பினா். கிராம நிா்வாக அலுவலா் சரவணன் பணத்தை பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சரவணனையும், அவருக்கு துணையாக இருந்த உதவியாளா் மாதவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

