தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

சேலத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரோந்துப் பணியின் போது 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரோந்துப் பணியின் போது 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் முள்ளுவாடி கேட் மேம்பாலம் பகுதியில் நகரப் போலீஸாா் புதன்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனா். அவா்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில், வலி நிவாரண மாத்திரைகளும், கஞ்சாவும் இருப்பது தெரியவந்தது.

தொடா் விசாரணையில், போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளையும், கஞ்சாவையும் வாங்கி விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரிஷிகேஷ் (23), விக்கி (எ) விக்னேஷ் (25), ஈஸ்வரன் (26), ஆனந்தகுமாா் (22) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 112 வலி நிவாரண மாத்திரைகளையும், 2 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.