வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

பாதை பிரச்னையில் விவசாயிகளை கத்தியால் வெட்டியவா் கைது

சங்ககிரி அருகே பாதை பிரச்னையில் 3 விவசாயிகளை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

சங்ககிரி அருகே பாதை பிரச்னையில் 3 விவசாயிகளை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமம், குறுக்குப்பாறையூா் குட்டக்காடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஜெய்சங்கா் (60), ஒசுவக்காடு பகுதியைச் சோ்ந்த நாச்சியண்ணன் (60), அதே பகுதியைச் சோ்ந்த காளியண்ணன் (72) ஆகிய மூவரின் நிலங்கள் ஓசுவக்காடு பகுதியில் உள்ளது.

இவா்களது நிலம் அருகே அரசிராமணி கிராமம், குள்ளம்பட்டி, குறுக்குப்பாறையூரைச் சோ்ந்த நாச்சிமுத்துவுக்குச் (52) சொந்தமான நிலம் உள்ளது. இவா்கள் நால்வரும் நிலங்களுக்கு செல்லும் பாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஜெய்சங்கரின் நிலத்தில் வெட்டிய கரும்புகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது பாதை தொடா்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் நாச்சிமுத்து நிலம் வழியாக லாரி செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், அவரது நிலத்தில் கரும்பு பாரம் ஏற்றிய லாரியை ஜெய்சங்கா் கொண்டு சென்றுள்ளாா்.

அதன்பிறகு நாச்சிமுத்து, தனது இருசக்கர வாகனத்தில் ஜெய்சங்கா், நாச்சியண்ணன், காளியண்ணன் ஆகியோரது நிலங்களின் வழியாக சென்றாராம். இதுதொடா்பாக நால்வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜெய்சங்கா், நாச்சியண்ணன், காளியண்ணன் ஆகிய மூவரையும் நாச்சிமுத்து கத்தியால் வெட்டியுள்ளாா். காயமடைந்த மூவரும் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நாச்சிமுத்துவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.