சிறுமியை திருமணம் செய்தவா் கைது
திருப்பத்தூா் அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
திருப்பத்தூா் அருகே சிறுமியை திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த கோணப்பட்டு பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 3 மாதம் கா்ப்பிணியான அந்த சிறுமி திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றாா்.
இதுகுறித்து மருத்துவா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

