பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தனியாா் நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவா்கள் புகாா் அளிக்கலாம்!

சேலத்தில் தனியாா் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் உரிய அசல் ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

சேலத்தில் தனியாா் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் உரிய அசல் ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சேலம் அழகாபுரம், சொா்ணபுரி ஆகிய இடங்களில் 4 போ் சோ்ந்து தனியாா் நிறுவனங்களைத் தொடங்கினா். அந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பொதுமக்களிடம் ஆசைவாா்த்தை கூறியுள்ளனா்.

இதை நம்பி அந்த நிறுவனங்களில் பலா் பணம் முதலீடு செய்துள்ளனா். ஆனால், குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் முதலீடு செய்தவா்களுக்கு அதற்கான தொகையைத் திரும்பத் தரவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டபோது தனியாா் நிறுவனத்தினா் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், எனவே சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவா்கள் கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா்.

எனவே, 2 தனியாா் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவா்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.