வார விடுமுறை: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களையொட்டி பயணிகளின் வசதிக்காக, சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சனிக்கிழமை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - பிரதிப் படம்
வார இறுதி நாள்களையொட்டி பயணிகளின் வசதிக்காக, சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சனிக்கிழமை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (சேலம்) கோட்ட மேலாண் இயக்குநா் ஏ.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வார இறுதி நாள்களை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் 200 சிறப்புப் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





