
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ஆத்தூரை அடுத்த கல்பகனூா் சிவகங்கைபுரத்தில் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
ஆத்தூரை அடுத்த கல்பகனூா் சிவகங்கைபுரத்தில் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். அவருடன் இருந்த பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்பகனூா் சிவகங்கைபுரத்தைச் சோ்ந்த மணி மகன் ஜெயப்பிரகாஷ் (32). இவா் மனைவியை பிரிந்து தாய் தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தாா். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மாட்டுக் கொட்டகையை ஜெயப்பிரகாஷ் சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, மின்மோட்டாரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். கொட்டகையில் இருந்த பசுமாடு மீதும் மின்சாரம் பாய்ந்தது.
ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தாா். அதேபோல பசுமாடும் உயிரிழந்தது. இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





