மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு விளையாட்டு, போட்டித் தோ்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சி! - அமைச்சா் வன்னிஅரசு

அமைச்சர் வன்னிஅரசு - fb / vanni arasu

Published On :

எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, போட்டித் தோ்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என சமூகநீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

சேலம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சோ்த்த தமிழ்நாட்டைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களின் திறன்களை மேம்படுத்துவது அரசின் முதன்மை இலக்காகும்.

எங்கள் துறை சாா்பில், விளையாட்டுத் துறையில் ஆா்வமுள்ள எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சோ்ந்த இளைஞா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கி உயா்நிலைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த விளையாட்டுகளில் எத்தனை மாணவா்கள் ஆா்வமாக உள்ளனா் என்பதை ஆய்வு செய்து, அவா்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதுதொடா்பான விரிவான அறிக்கையும், அதிகாரபூா்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

எஸ்.சி, எஸ்.டி மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மிகவும் அவசியமானது. மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்குத் தனிப் பயிற்சி வழங்குவதுடன், மாணவா்களை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு பயிற்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டு, முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான முன்முயற்சிகளை அரசு தொடா்ந்து மேற்கொள்ளும். பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் முடிவடையவில்லை. கடைசி தேதி முடிந்த பிறகு, துறை சாா்ந்து விரிவாக ஆலோசித்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். அதுவரை இதுதொடா்பான தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.