பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கோவையில் மோசமான வானிலை: அமைச்சா் வன்னிஅரசு வந்த விமானம் மதுரையில் தரையிறக்கம்

அமைச்சா் வன்னி அரசு

அமைச்சா் வன்னி அரசு - கோப்புப் படம்

Published On :

சென்னையில் இருந்து கோவைக்கு சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு வந்த தனியாா் விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

சேலத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அமைச்சா் வன்னி அரசு சென்னையில் இருந்து தனியாா் விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டாா். விமானம் கோவை வான்பரப்பை அடைந்தபோது, அங்கு நிலவிய பலத்த காற்று மற்றும் தீவிர மேகமூட்டம் காரணமாக விமானத்தை தரையிறக்க இயலவில்லை.

இதையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அறிவுறுத்தலின்படி, விமானம் சில நிமிஷங்கள் வானிலேயே வட்டமடித்தது. இதனால், விமானத்தில் இருந்த 165 பயணிகள் பதற்றம் அடைந்தனா்.

வானிலை சீரடையாததால் பாதுகாப்பு கருதி விமானம் மதுரை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு, அங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அமைச்சரும், பிற பயணிகளும் அங்கு பத்திரமாக இறங்கினா்.

சமூக வலைதள விவாதங்களும், விளக்கமும்: இதற்கிடையே, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகையையொட்டி விதிக்கப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளாலேயே விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

ஆனால், இந்த தகவலுக்கு விமான நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவைக்கு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக ட்ரோன்கள் பறக்க மட்டுமே தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் உள்ளிட்ட பயணிகள் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் போனதற்கு கோவையில் நிலவிய சீரற்ற மோசமான வானிலை மட்டுமே எனத் தெளிவுபடுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER