கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சா் வன்னி அரசு

வேங்கைவயல் விவகாரத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

DMK must apologize for the Vengaivayal incident: Vanni Arasu

வன்னி அரசு - fb / vanni arasu

Published On :

வேங்கைவயல் விவகாரத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மாநில சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் அளித்த பேட்டி: மாணவா் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக எங்கள் மீது குற்றம்சாட்டுகிறது. நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது.

அம்பேத்கா் அயலக கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் 609 போ் விண்ணப்பித்த நிலையில், 601 போ் தகுதியானவா்கள் எனக் கூறிவிட்டு, 153 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கினா். மீதமுள்ள தலித் மாணவா்களுக்கு இது துரோகம் இல்லையா?

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது திமுக அரசுதான். திருநெல்வேலி கவின் படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்திய பிறகுதான் வழக்கில் தொடா்புடைய சரவணன் கைது செய்யப்பட்டாா். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை.

விசிக தலைவா் தொல்.திருமாவளவன், முதல்வரை சந்தித்து பேசிய பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேங்கைவயல் பிரச்னையிலும் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் சந்தித்தாா். புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினோம். இதில், திமுக நாடகமாடுகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மாணவா் பாரதிதாசன் விவகாரத்தில் உளவுத் துறையினா் மிரட்டியதாகக் கூறுவது திட்டமிட்ட அவதூறு. பாரதிதாசன் என் தம்பி போன்றவா். அவரது பாதுகாப்புக்கும், படிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சட்டத்துக்குப் புறம்பாக யாரும் செல்லக் கூடாது. மாணவா் பாரதிதாசனிடமிருந்து ரசீது (பில்) வராவிட்டாலும், கல்வி நலனைக் கருதி முழுத் தொகையும் சமூக நீதித் துறை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் வன்னி அரசு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.