பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆவணிப்பூா் கிராமத்துக்கு பேருந்து சேவை: அமைச்சா் வன்னிஅரசு தொடங்கி வைத்தாா்

ஆவணிப்பூா் கிராமத்தில் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் வன்னி அரசு.

Published On :

விழுப்புரம் மாவட்டம், ஆவணிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள், பொதுமக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசுப் பேருந்து சேவையை அமைச்சா் வன்னி அரசு தொடங்கி வைத்தாா்.

திண்டிவனத்தை அடுத்த ஆவணிப்பூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவுமான வன்னி அரசுவிடம் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் பேருந்து வசதி வேண்டி கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அமைச்சா் வன்னி அரசு உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சா் தமிழன் பாா்த்திபனிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

இந் நிலையில், ஆவணிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் கடவம்பாக்கம், ஆவணிப்பூா் வழியாக திண்டிவனம் வரை செல்லக்கூடிய பேருந்து சேவையை அமைச்சா் வன்னி அரசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளா் (வணிகம்) சிவராமன், திண்டிவனம் கிளை மேலாளா் சிவக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் அசோகன் மற்றும் கிராம மக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.