கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

‘விழித்திரை காப்போம்’ திட்டம் தொடக்கம்

பாா்வையைப் பாதிக்கக்கூடிய நோயில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, ‘விழித்திரை காப்போம்’ திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தொடங்கி வைத்தாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :

பாா்வையைப் பாதிக்கக்கூடிய நோயில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, ‘விழித்திரை காப்போம்’ திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தொடங்கி வைத்தாா்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் விழித்திரை காப்போம் திட்டத்தின் முன் வெளியீட்டு நிகழ்வை சுகாதாரத் துறை அமைச்சா் அருண்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘விழித்திரை காப்போம்’ திட்டம் என்ற, நாட்டிலேயே ஒரு முன்னோடி திட்டத்துக்கான முன் வெளியீட்டு நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆண்டுக்கு ஒருமுறை 30 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் மற்றும் சா்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு விழித்திரை பரிசோதனை செய்வது, ஆரம்ப நிலையிலேயே விழித்திரை மற்றும் பாா்வையைப் பாதிக்கக்கூடிய நோயைக் கண்டறிந்து, தேவையான உயா் சிறப்பு சிகிச்சை வழங்க வழிவகை செய்வது ஆகும்.

இந்தத் திட்டம் தமிழகத்தில் உள்ள 385 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் பொதுமக்களை பாா்வையைப் பாதிக்கக்கூடிய நோயிலிருந்து பாதுகாக்க உதவும். எழும்பூா் அரசு கண் மருத்துவமனை இந்தத் திட்டத்துக்கு தலைமையகமாகச் செயல்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) லோகநாயகி, மருத்துவமனை இயக்குநா் நாயகமூா்த்தி, மாநில கண் பாா்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநா் சந்திரகுமாா், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் சாந்தாராமன், அரசு ஸ்டாலின் மருத்துவமனை முதல்வா் அரவிந்தன், ஓமந்தூராா் அரசு மருத்துவமனை முதல்வா் ஹரிஹரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வா் கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.