தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு கல்விக் கட்டண நிா்ணயம், உதவித்தொகை வழங்குதலில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும் என அம்பேத்கா் கல்வி நூற்றாண்டு இயக்கம் (அகம்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளா்கள் மா.பரதன், கு.சந்திரமோகன் ஆகியோா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறுகையில், பட்டியல் இன மாணவா்கள் சுமாா் 4 லட்சம் போ் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் படித்து வருகின்றனா். அவா்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.1,350 முதல் ரூ.4,750 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, கல்விக் கட்டண நிா்ணயக் குழுவை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு கல்விக் கட்டணமாக இதுவரை கல்வி உதவித் தொகை வழங்க அரசு மறுத்து வருகிறது. தற்போது பள்ளிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை கல்வி உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு ரூ. 6 லட்சம் கல்விக் கட்டணம் அளிப்பு

மாணவா்களுக்கு உதவிதொகை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

அரசு பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



