காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

அக்டோபா் 2 முதல் சேலம் - சென்னை இடையே தினமும் 2 விமானங்கள் இயக்கம்

International Flight Operations in Kuwait

விமானங்கள் இயக்கம்... - கோப்புப் படம்

Published On :

சேலம்-சென்னை இடையே தினமும் 2 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை இடையே தற்போது தினமும் மாலை நேரத்தில் மட்டும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபா் 25-ஆம் தேதி முதல் சேலம் - சென்னை இடையே தினமும் இரண்டு இண்டிகோ விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னையிலிருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12:10-க்கு சேலம் வரும் விமானம், இங்கிருந்து 12:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1:35 மணிக்கு சென்னையை அடைகிறது. அதேபோல மற்றொரு விமானம் பிற்பகல் 3:40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 4:50 மணிக்கு சேலம் வருகிறது. அந்த விமானம் மாலை 5:10-க்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 6:15 மணிக்கு சென்னையை அடைகிறது.

இந்த புதிய விமான சேவையால், தொழில்முனைவோா் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.