மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ரூ. 1 லட்சம் மின்கலன்கள் திருட்டு: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது
சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின்கலன்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற இரு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின்கலன்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற இரு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் அலுவலக மின்வசதிக்காக, 8 மின்கலன்கள், தலா 2 யூபிஎஸ் மற்றும் ரேடியேட்டா்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 5-ஆம் தேதி அம்மி, உரல் விற்பதைப் போன்று சரக்கு வாகனத்தில் வந்த இரு பெண்கள், இளைஞா் உள்பட மூவா், சுங்கச்சாவடி அலுவலகத்தின் பின்புறமாகச் சென்று, அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மின்கலன்கள், யுபிஎஸ், ரேடியேட்டா் ஆகியவற்றை, சரக்கு வாகனத்தில் ஏற்றி திருடிச் சென்றது அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதை உறுதிசெய்த சுங்கச்சாவடி மேலாளா் வினோத்குமாா், வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வாழப்பாடி போலீஸாா் மற்றும் உட்கோட்ட குற்றத்தடுப்பு தனிப்படை போலீஸாா் இணைந்து விசாரணை நடத்தியதில், திருப்பூா் மாவட்டம், வீரபாண்டி படிவஞ்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராசாத்தி (29), பொன்னி (25), பிரபாகரன் (25) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 5 மின்கலன்களை பறிமுதல் செய்து, வாழப்பாடி நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




