100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

42 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் கருகும் அபாயம்

திருவாடானை, அக். 21: ரா மநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் 42 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தின் 2-வது நெல் களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் தொண்டி, திருவாடா

Published On :

திருவாடானை, அக். 21: ரா மநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் 42 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தின் 2-வது நெல் களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் தொண்டி, திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட 7 பிர்காக்கள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு உள்ளது. இதில் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பளவில் தரிசு நிலங்கள் உள்ளன.

  எஞ்சிய பகுதியான 42 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது.

  திருவாடானை தாலுகாவில் பாசனத்துக்குப் பொதுப் பணித் துறை பராமரிப்பில் 200 பெரிய கண்மாய்கள், யூனியன் பராமரிப்பில் 300 சிறு கண்மாய்கள் உள்ளன. தமிழகத்தின் 2-வது பெரிய கண்மாய் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ளது. தற்போது மழை இல்லாமல் அவை வறண்டு காணப்படுகின்றன.  கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த சிறு மழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் இறங்கினர். சில இடங்களில் பயிர்கள் முளைத்து களைவெட்டும் பணியும் நடைபெற்றுவரும் வேளையில் பருவமழையை நம்பி விவசாயிகள் இருந்த நிலையில் சம்பா பருவ நெல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் மாவட்டத்திலே அதிக நெல் உற்பத்தியைத் தரும் பகுதியான திருவாடானை தாலுகா முழுவதும் சுமார் 42 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பளவில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பல கோடி ருபாய் நஷ்டம் அடையும் நிலை உருவாகியுள்ளது.

  இதுசம்பந்தமாக திருவெற்றியூர் விவசாயி ராமநாதன் கூறியது:

  தற்போது பெய்த சிறுமழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் இறங்கினோம். மேலும் விவசாயப் பணிகளுக்கென்று சிறு நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த நிலையில் இன்னும் ஒருசில நாள்களே பயிர்கள் தாங்கும். இந்த நிலை நீடித்தால் பயிர்கள் கருகி அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும். என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.