சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் விழா

கமுதி, அக். 23:   திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் விழா ஏற்பாடு பணிகள், வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றி, பூஜை வழிபாடு நடத்தி துவங்கப்பட்டன.   ஆண்டுதோறும் திராவிட விழிப்புணர்ச

Updated On :20 செப்டம்பர் 2012, 4:49 pm

கமுதி, அக். 23:   திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் விழா ஏற்பாடு பணிகள், வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றி, பூஜை வழிபாடு நடத்தி துவங்கப்பட்டன.

  ஆண்டுதோறும் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை விழாவை கழகத் தலைவர், டாக்டர் பி.டி.அரசகுமார் நடத்தி வருகிறார். விழா முன்னிட்டு முளைப்பாரி பவனி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

  விழா துவக்கப்பணிகள் துவக்க நிகழ்ச்சியாக, முகூர்த்த கால் ஊன்றி, பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலர் இ.செல்லத் துரை பாண்டியன் தலைமையும், ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பூமித்தேவர் முன்னிலையும் வகித்தனர். கமுதி ஒன்றிய செயலர் தயாளன் வரவேற்றார்.

  பசும்பொன் தேவர் விழா முளைப்பாரி பவனியில் பங்கேற்கும் மகளிர் அணியினருக்கு சீருடை புடவைகளும், விழாவில் அணிவகுத்துச் செல்லும் இளைஞர் அணியினருக்கு சீருடை டவுசர் மற்றும் பனியன்களும், தொண்டர்களுக்கு வேட்டிகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.