சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வறண்ட கண்மாய்கள்; கருகும் பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்

மானாமதுரை, ஜன. 3: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியப் பகுதியில் தண்ணீரின்றி கண்மாய்கள் வறண்டு வருகின்றன. நெல் பயிர்கள் வளர்ந்துவரும் நிலையில், அவை தண்ணீரில்லாமல் கருகத் தொடங்கியுள்ளதால், கடன் வாங்கி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:16 pm

வாழ்வியல் வழிகாட்டி ஆர். கே

மானாமதுரை, ஜன. 3: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியப் பகுதியில் தண்ணீரின்றி கண்மாய்கள் வறண்டு வருகின்றன. நெல் பயிர்கள் வளர்ந்துவரும் நிலையில், அவை தண்ணீரில்லாமல் கருகத் தொடங்கியுள்ளதால், கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பயிர்களைக் காப்பாற்ற வைகையில் உடனே தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி வருகின்றனர்.

   மானாமதுரை தாலுகா பகுதியில் பெரும் பகுதி விவசாயம் வைகைத் தண்ணீரை நம்பித்தான் உள்ளது. இந்தாண்டு இத் தாலுகா பகுதியில் தொடர்ந்து பெய்த மழையாலும் வைகையாற்றில் தொடர்ந்து 10 நாள்களாகத் திறக்கப்பட்ட தண்ணீரையும் பயன்படுத்தி விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை நடவு செய்தனர்.          தற்போது இப் பகுதி வைகை பாசனக் கண்மாய்களில் பல தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. திருப்புவனம் ஒன்றியம், கானூர் கண்மாய் பாசனத்தில் கானூர், மிக்கேல்பட்டினம், மீனாட்சிபுரம், கல்லூரணி, பச்சேரி, வேம்பத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  விவசாயிகள் 3,500 ஏக்கரில் உயர்வகை நெல் பயிர்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை நடவு செய்தனர்.

   தற்போது  இப் பயிர்கள் முளைத்து இன்னும் சில வாரங்களில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ளன. தற்போது இந்தப் பயிர்களைக் காப்பாற்ற  தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கானூர் கண்மாய் தற்போது தண்ணீரில்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. இதனால் நடவு செய்த பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரில்லாமல் என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

   இந் நிலை குறித்து, கானூர் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் உலகநாதன் கூறியதாவது.

    தொடர்ந்து பெய்த மழையையும் வைகையில் வந்த தண்ணீரையும் நம்பி எங்கள் பகுதி விவசாயிகள் கடன் வாங்கி நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை நடவு செய்தனர். இந்தப் பயிர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். ஆனால், இந்தப் பயிர்களைக் காப்பாற்றி அறுவடை வரைக்கும் கொண்டு வருவதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

   வைகையில் ஏற்கெனவே திறக்கப்பட்ட தண்ணீர் கானூர் கண்மாய்க்கு வந்து தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் உள்ளது. இதே நிலை மானாமதுரை தாலுகா முழுவதும் உள்ளது. தற்போது வைகை அணையில் திறக்கக் கூடிய அளவுக்கு பேதுமான தண்ணீர் உள்ளது. எனவே, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித் துறை நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுóத்து, தண்ணீரின்றி கருகி வரும் பயிர்களைக் காப்பாற்ற மானாமதுரை பகுதிக்கு வைகையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்.

    இதுகுறித்து மேற்கண்ட நிர்வாகங்களுக்கு விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து வலியுறுத்த உள்ளோம். வைகையாற்றில் தண்ணீர் திறக்க கால தாமதம் ஏற்பட்டால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.