நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

| பழனி நகர் காவல் நிலையம் திறப்பு விழா எப்போது?

பழனி, அக். 4:       பழனி நகர் காவல் நிலையத்துக்கான கட்டடம், டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் | 35 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இன்னும் திறக்கப்படாததால், காவல் துறையினருடன் சேர்ந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:06 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி, அக். 4:       பழனி நகர் காவல் நிலையத்துக்கான கட்டடம், டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் | 35 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இன்னும் திறக்கப்படாததால், காவல் துறையினருடன் சேர்ந்து பொது மக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    பழனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு உள்பட்டதாக, பழனி டவுன், பழனி அடிவாரம், குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், பழனி போக்குவரத்து பிரிவு, பழனி தாலுகா, ஆயக்குடி, கீரனூர், சத்திரப்பட்டி காவல் நிலையம் ஆகியன உள்ளன.  இவற்றில், பழனி காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அடிவாரம், சத்திரப்பட்டி காவல் நிலையம் மற்றும் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியன மட்டுமே கட்டடங்களாக உள்ளன.

    மற்ற அனைத்துக் காவல் நிலையங்களும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. மேலும், பழனி தாலுகா காவல் நிலையம், ஆயக்குடி காவல் நிலையம் ஆகியவை வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.

    இந்நிலையில், பழனி நகர் காவல் நிலையத்துக்கு விமோசனம் வந்தது போல, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் | 35 லட்சம் செலவில் புதிய காவல் நிலையக் கட்டடம் கட்டும் பணி துவங்கி, கடந்த ஆகஸ்ட் இறுதியில் பணிகள் முடிவடைந்தன.

    பணிகள் முடிந்து இரண்டு மாதங்களாகியும், இன்னும் காவல் நிலையம் திறக்கப்படவில்லை. காரணம், பழனி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்தக் கட்டடத்தை ஏற்க முடியாது என, ஒப்பந்ததாரரிடமே சாவியை திரும்ப ஒப்படைத்துவிட்டாராம். ஏனென்றால், காவலர் ஓய்வு அறை, வரவேற்பு அறை ஆகியன மிகவும் குறுகலாக உள்ளதாகக் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விஷயம் திண்டுக்கல் எஸ்.பி. வரையில் சென்றுவிட்ட போதிலும், இன்று வரை கட்டடம் திறக்கப்படுவதற்கான தருணம் அமையவில்லை. கட்டடம் தற்போது வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.

    கட்டடத்துக்கான திட்டம் மற்றும் வரைபடத்தை நகர் காவல் நிலைய போலீஸôர்  முன்பே பார்த்து ஆய்வு செய்திருந்தால், இப்பிரச்னை இப்போது எழுந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

    தற்போது, நகர் காவல் நிலையம் மற்றும் குற்றப்பிரிவு ஆகியவை பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான விடுதி மற்றும் பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகின்றன. இதற்கு, மாதம் சுமார் | 10 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது.

   இங்கு, வண்டி, வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும், குற்றவாளிகளை விசாரிக்கவோ, தாற்காலிகமாக சிறையில் அடைக்கவோ எந்தவித வசதியும் இல்லை. எனவே, போலீஸôர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

   எனவே, தற்போது புதியக் கட்டடத்துக்கான திறப்பு விழா கேள்விக்குறியாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதனால், போலீஸôருடன் பொது மக்களும் அவதிப்படும் நிலை தவிர்க்கப்படுவதோடு, தற்போதுள்ள இடத்துக்கு அளிக்கப்படும் வாடகைப் பணமும் மிஞ்சும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.