விருதுநகர், ஜன. 8: விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசார ஓட்டுநர்கள் அணி சார்பில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வலியுறுத்தி தேசபந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.கே.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புசார ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.செந்தில்முருகன், நகரச் செயலாளர் அசோகன், ஓன்றியச் செயலாளர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில மாணவரணிச் செயலாளர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.