ஆக்கிரமிப்பு அகற்றப்படாததைக் கண்டித்து பொங்கலன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு

காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தைப்பொங்கலன்று மாந்தோப்பு கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்று
Updated on
1 min read

காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தைப்பொங்கலன்று மாந்தோப்பு கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றுவது என கிராமக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 மாந்தோப்பு கிராமத்தில் வாருகால் கட்டப்படாதாதல் குடிநீரில் சாக்கடைக் கழிவு நீர் கலந்து வருகிறது. பள்ளிக்கூடத்திற்குப் பின்புறம் உள்ள புறம்போக்கு இடங்களைப் பலர் ஆக்கிரமித்துள்ளதால் கூடுதல் பள்ளிக் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைக்க முடியவில்லை. ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஆட்சியரிடம் புகார் அளித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

  இதைக் கண்டித்து கிராமக் குழுக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராமக் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

  ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தைப் பொங்கலன்று கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com