ஆடு மேய்த்த கொத்தடிமை சிறுவர்கள் 2 பேர் மீட்பு

காரைக்குடி, ஜன. 8: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆட்டுக்கிடை ஒன்றில் ஆடு மேய்க்கவைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக 2 சிறுவர்கள் சனிக்கிழமைமீட்கப்பட்டனர்   காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலில
Updated on
1 min read

காரைக்குடி, ஜன. 8: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆட்டுக்கிடை ஒன்றில் ஆடு மேய்க்கவைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக 2 சிறுவர்கள் சனிக்கிழமைமீட்கப்பட்டனர்

  காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலில் ஒரு சிறுவனை மதியம்  ஒப்ப டைக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் மேலும் ஒரு சிறுவன் மீட்கப்பட்டான்.

  காரைக்குடி அருகே, திருப்பத்தூர் வட்டம், தளக்காவூர் ஊராட்சித் தலைவர் பெரி. முருகப்பன் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்டம் தென்ன மரக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன், மேரி ஆகியோரது மகன் மெடிசன் (7) என்ற சிறுவனுடன் வந்து புகார் செய்தார்.

  அப்புகாரில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமேஷ் என்பவரது மகன் சுரேஷ் 200 செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மெடிசனை அவரது பெற்றோர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக வைத்து சிறுவனை கொடுமைப்படுத்தினாராம்.  சனிக்கிழமை பகல் 12 மணியளவில் ஆடு மேய்க்க வைத்த சுரேஷிடமிருந்து தப்பி மானகிரி கடைவீதில் வந்து என்னிடமும், கீரணிப்பட்டியைச்சேர்ந்த செல்வம் என்பவரிடமும் தன்னை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டான். சிறுவன் உடல் முழுவதும் காயங்களும், தழும்புமாக மிகவும் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் உள்ளான். எனவே சிறுவனை அரசு காப்பகத்தில் சேர்க்கவேண்டும்.

  அவனை கொத்தடிமையாக நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

   அவர் நிருபர்களிடம் கூறியது: இச்சிறுவன் குறித்து கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்தேன். அவர் காரைக்குடி வட்டாட்சியரிடம் புகார் செய்யச் சொன்னதன் பேரில் சிறுவனை இங்கு ஒப்படைக்கப்பட்டான்.

  சிறுவனை விலைக்கு விற்ற பெற்றோர்கள் மீதும், சிறுவனை விலைக்கு வாங்கி கொத்தடிமையாக கொடுமைப்படுத்தியவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.    இப்புகார் குறித்து காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் சிறுவனிட மும், கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்ட சுரேஷிடமும் விசாரித்தனர். அதில் மேலும் ஒரு சிறுவன் இருப்பது தெரியவந்தது.  திருவாரூர் மாவட்டம், தென்னமரக்குடி அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாலச்சந்திரன் (12) என்ற சிறுவனும் அவனது பெற்றோர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கப்பட்டு சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்த்ததாக தெரியவந்ததையடுத்து 2 சிறுவர்களையும் அதிகாரிகள் மீட்டு மேல்நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com