தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆற்றுப் பாலத் தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை

கம்பம், ஜன. 8:கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி சுருளி ஆற்றுப் பாலத்தில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர் மற்றும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் அருகே உள்ள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கம்பம், ஜன. 8:கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி சுருளி ஆற்றுப் பாலத்தில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர் மற்றும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டிக்கு செல்லும் வழியில் சுருளி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப் பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. தற்போது இந்தப் தடுப்புச் சுவர் மற்றும் அதையொட்டி உள்ள சாலை சேதமடைந்து, அப் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.இப் பாலத்தைக் கடந்துதான் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின் நிலையம், மின் வாரிய ஊழியர்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். மேலும், இப் பாலம் வழியாக தினந்தோறும் தேக்கடி, கூடலூர், கேரளத்திலிருந்து சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் சென்று வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக, கம்பம் முதல் குள்ளப்பகவுண்டன்பட்டி வரையிலும், சுருளியாறு மின் நிலையத்துக்கும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதிக வாகன போக்குவரத்து உள்ள இப் பாலத்தின் தடுப்புச் சுவரையும், சாலையையும் புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதியினர் கடந்த 2 மாதங்களாக நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இப் பாலத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.