உசிலம்பட்டி பகுதியில் புதிய பஸ்கள் இயக்கம்

உசிலம்பட்டி, ஜன. 8: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.    உசிலம்பட்டி பகுதியில் பெரும்பகுதி விவசாய தொழில்லே நடைபெற்று வருகின்றன. எனவே மழை இல்லாத காலங்களில் பிழ
Updated on
1 min read

உசிலம்பட்டி, ஜன. 8: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.

   உசிலம்பட்டி பகுதியில் பெரும்பகுதி விவசாய தொழில்லே நடைபெற்று வருகின்றன. எனவே மழை இல்லாத காலங்களில் பிழைப்புத் தேடி திருப்பூர், கோவை, கரூர், சேலம், பொள்ளாச்சி ஆகிய வெளியூர்களுக்கு சென்று பணியாற்றி வந்தனர்.

   இவ்வாறு செல்லும் உசிலம்பட்டி மக்களுக்கு நேர்வழியாக செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.

அப்போது மறைந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. வல்லரசு முயற்சியில் எம்.கல்லுப்பட்டி, எழுமலை, உசிலம்பட்டி வழியாக மதுரை- சேலம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

  நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், மதுரை மண்டல பொது மேலாளர் சி.வெங்கடாசலம் ஆகியோர் உத்தரவின்படி அந்த பழைய பஸ்கள் மாற்றப்பட்டு 11 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.

   7.1.2011-ம் தேதி இந்த புதிய பஸ்களை உசிலம்பட்டி கிளை மேலாளர் அறிவானந்தன் பூஜை செய்து இயக்கி வைத்தார். இந்த புதிய பஸ்களின் வரவால் உசிலம்பட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com