ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜன.12 மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தனித்திறன் போட்டி

விருதுநகர், ஜன. 8: மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இடையே தனித்திறன் போட்டிகள் ஜனவரி 12-ம் தேதி விருதுநகர் சத்திரிய வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.   விருதுநகர் மகள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

விருதுநகர், ஜன. 8: மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இடையே தனித்திறன் போட்டிகள் ஜனவரி 12-ம் தேதி விருதுநகர் சத்திரிய வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

  விருதுநகர் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு இடையே மாவட்ட அளவில் தனித்திறன் போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் கோலப் போட்டிகள், சமுதாயப் பிரச்னைகளில் மகளிர் குழுக்களின் செயல்பாடுகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையில் மகளிர் குழுக்களின் பங்கு ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி, மகளிர் ஒற்றுமை என்ற தலைப்பில் பாட்டுப் போட்டி, குறு நாடகம் உள்ளிட்டவை நடைபெறும்.

  ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுகிறவர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 5000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 3000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 2000-ம் வழங்கப்படும்.

  இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு டிசம்பர் 2010-ல் நடைபெற்ற 11 வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற மகளிர் குழுக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

  அன்று மாலை வெற்றி பெற்ற கூட்டமைப்புக் குழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  இத்தகவலை மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.