இக் கிராமத்தில் பரவலாக கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர கிடை மாடுகள் வளர்க்கும் தொழிலில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் மாடுகளை வளர்க்கும் இவர்கள், அவற்றை நாள் முழுவதும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதிலேயே தங்களது நேரத்தைச் செலவிடுகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மலைராசு, கண்ணன், மாரி ஆகியோர் கூறியதாவது:எங்களிடம் காளைகள், பசுக்கள் என மொத்தம் 500 மாடுகள் உள்ளன. பெரும்பாலும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும் இந்த மாடுகளை வயல்வெளிகளில் தொழு உரமிடுவதற்காகப் பயன்படுத்துகிறோம்.