ஒட்டன்சத்திரம், அக். 8: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே டேங்கர் லாரி மோதியதில், சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.
இடையகோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் தண்டபாணி (42), பழனிச்சாமி (60). இவர்கள் இருவரும் சனிக்கிழமை தனது உறவினரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, சிந்தலப்பட்டிக்குச் சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள தங்களது நண்பரான ஜோதிடர் சிவராமன் என்பவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு, மூவரும் ஒரே வாகனத்தில் கள்ளிமந்தையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை தனியார் சோடா நிறுவனம் அருகே, பின்புறமாக வந்த டேங்கர் லாரி மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனிச்சாமியும், ஜோதிடர் சிவராமனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லேசான காயங்களுடன் தப்பித்த தண்டபாணி, இது குறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகக் கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுரை!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


