பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு புதிதாக 17 குப்பை லாரிகள்

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியின் குப்பை அகற்றும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள 17 குப்பை லாரிகளை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

Updated On :12 மே 2013, 5:58 am IST

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியின் குப்பை அகற்றும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள 17 குப்பை லாரிகளை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

  மதுரை மாநகராட்சியுடன் ஆணையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் நகராட்சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, 100 வார்டுகளாக மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.

 இப் பகுதிகளின் குப்பை அகற்றும் பணிக்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் 2011-2012 ஆம் ஆண்டுக்கான நிதியின்கீழ் வாகனங்கள் வாங்குவதற்காக ரூ.10 கோடி அரசின் மானியமாகப் பெறப்பட்டது. இதில் 50 டம்பர் பிளேசர் வாகனம், 2 காம்பேக்டர் வாகனம், 400 டம்பர் பின் (குப்பைத் தொட்டி), 125 காம்பேக்டர் பின் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 17 டம்பர் பிளேசர் வாகனங்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டன. மீதமுள்ள வாகனங்களும் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

 மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்காக ஏற்கெனவே 50 டம்பர் பிளேசர் வாகனங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 50 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால், வார்டுக்கு தலா ஒன்று என்ற அளவில் குப்பை அள்ளும் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  செல்லூரில் உள்ள மாநகராட்சி லாரி நிறுத்தும் இடத்தில், புதிய  வாகனங்களை மேயர் ராஜன் செல்லப்பா பயன்பாட்டுக்குத் துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால், நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், உதவி ஆணையர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.