மத்திய பட்ஜெட்டில் அறிவித்தவாறு, நாகர்கோவில்-பெங்களுர் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என பெங்களூர் வாழ் நெல்லை குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, இச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக தினசரி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலை விரைவாக இயக்க, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தற்போது இயக்கப்படும் தூத்துக்குடி-மைசூர் தினசரி ரயில் அதிகாலையில் பெங்களூர் செல்லும் வகையில் உள்ளது. இதேபோன்று, நெல்லை மற்றும் குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி, நாகர்கோவில்-பெங்களூர் ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்குவதுடன், அதிகாலையில் பெங்களூர் செல்லும் வகையில் இயக்க வேண்டும்.
அதாவது, நாகர்கோவிலில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, பெங்களூருக்கு அதிகாலையில் செல்லும் வகையிலும், மறு மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் வகையில் இந்த ரயில் இயக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








