எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு

மதுரையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

Updated On :13 மே 2013, 12:06 am IST

மதுரையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

  மதுரை மேற்கு கே.கே.நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சபாபதி. கூட்டுறவுத் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி அழகம்மை (73). இவர், கே.கே.நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்புள்ள கடைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்றுள்ளார்.

  பின்னர், கடையிலிருந்து அவர் வீட்டுக்குத் திரும்பி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், அழகம்மை அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனர்.

 பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளின் மதிப்பு 9 பவுன் என போலீஸார் தெரிவித்தனர்.

  இது தொடர்பாக, அழகம்மை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.